விவசாயிகள் பால் காய்ச்சும் போராட்டம்
விவசாயிகள் பால் காய்ச்சும் போராட்டம்
திருப்பூர்
சேவூர்
தமிழகமெங்கும் பால் உற்பத்தியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்தும், தமிழக அரசிற்கு, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைளை ஏற்க வலியுறுத்தியும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பால் காய்ச்சும் போராட்டம் சேவூர் கைகாட்டி ரவுண்டானாவில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாநில பிரசாரகுழு தலைவர் மணி, மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் எம்.வேலுசாமி, ஏர் முனை இளைஞர் அணி அவினாசி ஒன்றிய தலைவர் கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் எம்.சுப்பிரமணி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க சேவூர் கிளை பொருளாளர் ரமேஷ், கிளை செயலாளர் தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-------
Related Tags :
Next Story