ரூ.16½ லட்சத்தில் பால் குளிரூட்டும் மையம்


ரூ.16½ லட்சத்தில் பால் குளிரூட்டும் மையம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே ரூ.16½ லட்சத்தில் பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

சிவகங்கை

திருப்புவனம் அருகே ரூ.16½ லட்சத்தில் பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

பால் குளிரூட்டும் மையம் திறப்பு

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழராங்கியன் கிராமத்தில் பால் குளிரூட்டும் மையம் திறப்பு விழா நேற்று கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். குளிரூட்டும் மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பொருளாதார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழராங்கியன் கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையம் ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக நிலம் தானமாக வழங்கிய சேகருக்கும், இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறனுக்கும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமாருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்பு திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பழையனூர்-வல்லாரேந்தல் சாலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் பொருட்டு ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையும் தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நபார்டு மற்றும் கிராம சாலைகள் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவருமான சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமது ரபீக், துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் மாரிச்சாமி, சரக முதுநிலை ஆய்வாளர் ராமச்சந்திரன், திருப்புவனம் யூனியன் தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, திருப்புவனம் தாசில்தார் கண்ணன், திருப்புவனம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், சுப்பையா ஊராட்சி மன்ற தலைவர்கள் மருதுபாண்டியன், சுப்பிரமணியன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பழனியம்மாள், மேலாளர் கிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகி சேகர், திருப்புவனம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அன்னமுத்து இளங்கோவன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், சங்கங்குளம் கிளைச் செயலாளர் சேது, ஒன்றிய இலக்கிய அணி தலைவர் பத்மநாதன், தகவல் தொழில் நுட்ப அணி பாலகிருஷ்ணன், இளைஞர் அணி வினோத் கண்ணன், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story