தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுகிறது - அமைச்சர் நாசர் தகவல்


தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுகிறது - அமைச்சர் நாசர் தகவல்
x

தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுகிறது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு, ராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை ஊற்றியும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், பால் கொள்முதலில் பிரச்சனை இல்லை என்றும், வழக்கம்போல் பால் கொள்முதல் நடைபெற்றதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு சில சங்கங்கள் தவிர இதர சங்கங்கள் வழக்கமான அளவுக்கு பால் வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நாசர் கூறுகையில், 9,354 சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறுவதாகவும், எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.


Next Story