பால்குட விழா
திருப்பத்தூரில் உள்ள முருகப்பெருமானுக்கு சித்திரை பால்குட விழா நடந்தது.
சிவகங்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் உள்ள முருகப்பெருமானுக்கு சித்திரை பால்குட விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் முருகன் சன்னிதியில் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். சித்திரை முதல்நாள் காலை 6 மணிக்கு கோட்டை கருப்பர் சாமி கோவிலில் கூடிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக தேரோடும் வீதி, பஸ் நிலையம், காரைக்குடி சாலை வழியாக திருத்தளிநாதர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியை வந்தடைந்தனர்.
பின்னர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று வள்ளி, தெய்வானையுடன் முருகர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story