திரவுபதி அம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்


திரவுபதி அம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
x

மாந்தாங்கல் மோட்டூர் திரவுபதி அம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் மோட்டூர் திரவுபதி அம்மன் கோவில் ஆறுபடை முருக பக்தர்கள் புனித யாத்திரை குழு சார்பில், கன்னி கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் நடைபெற்ற பால்குட ஊர்வலம் திரவுபதி அம்மன் கோவிலை சென்றடைந்ததும் விநாயகர், திரவுபதி அம்மன், முருகர், ஐயப்பன் ஆகிய உற்சவர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், தர்மகர்த்தாக்கள், நாட்டாமை தாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story