பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்


பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:45 PM GMT)

பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி-பங்குனி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதுதவிர அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும். நேற்று அம்பாளின் 67-வது ஆண்டு அவதார தின விழா நடைபெற்றது. முன்னதாக காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஓம் சஷ்டி சேவா சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கொப்புடையம்மன் கோவில் வீதி, 2-வது பீட் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சியும், கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பலகார நெய்வேத்தியம் நடந்தது. இரவில் வெள்ளிரதம் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் பாலாஜி, கணக்காளர் பாண்டி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story