பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
சிங்கம்புணரி அருகே மக்கண்டான் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மக்கண்டான் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பாலாற்று கரை ஓரத்திலிருந்து பூஜிக்கப்பட்ட பால்குடத்தை சுமந்து கொண்டு ஊர்வலமாக செல்வ விநாயகர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு செல்வ விநாயகர் மற்றும் முருகன் பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் கோவில் முன்பு பெண்கள் பங்குனி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு சாமி ஆட்டத்துடன் அரிவாளில் ஏறி சாமியாடி அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. .
Related Tags :
Next Story