பால்குடம் ஊர்வலம்


பால்குடம் ஊர்வலம்
x
தினத்தந்தி 9 April 2023 6:45 PM GMT (Updated: 9 April 2023 6:46 PM GMT)

பால்குடம் ஊர்வலம் நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி ஒன்றியம் கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று பாலாபிஷேகம் நடைபெற்றது. பங்குனி பொங்கல் உற்சவ விழா கடந்த 2-ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன் பால்குடம் ஊர்வலமாக சென்று கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முத்துமாரி அம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு அக்னி சட்டி, திருவிளக்கு, பூஜை மாவிளக்கு மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன் சோலையம்மாள், கடலாடி அ.தி.மு.க. சண்முக பாண்டியன் நாச்சியார், கிடாத்திருக்கை ஒன்றிய கவுன்சிலர் மீனாம்பாள் துரைப்பாண்டி, ஒப்பந்ததாரர் மகாலிங்கம் காளீஸ்வரி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story