ஆரணி பகுதியில் பால் விலை உயர்வு


ஆரணி பகுதியில் பால் விலை உயர்வு
x

ஆரணி பகுதியில் பால் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் (ஆவின்) மட்டுமே விலை ஏற்றம் செய்யப்பட்டிருந்தது. பால் கூட்டுறவு சங்கங்களில் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் பால் 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பால் விலை உயர்வு அறிவிக்கப்படாத நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திடீரென ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி 40 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆரணி நகரில் கடந்த 2 நாட்களாக விலை ஏற்றம் செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story