புதுச்சத்திரம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதுச்சத்திரம் அருகே  பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

புதுச்சத்திரம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 என உயர்த்தி வழங்கிட வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். மாட்டு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள பாக்கி தொகை மற்றும் போனஸ் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பால் கூட்டுறவு சங்கம் முன்பு கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜோதி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story