பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமராண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெருமாள்ராஜ் முன்னிலை வகித்தார். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். சத்துணவில் குழந்தைகளுக்கு பால், பால் பவுடர் வழங்க வேண்டும். மாட்டு தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநிலத் துணைச்செயலாளர் வெண்மணி சந்திரன், மாவட்டச் செயலாளர் மனோஜ் குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் விஜய முருகன் மற்றும் முருகன் கலந்து கொண்டனர்.


Next Story