பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்‌ நூதன ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்‌ நூதன ஆர்ப்பாட்டம்
x

பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்‌ நூதன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

வல்லம் அருகே உள்ள அய்யாச்சாமிபட்டியில், ஆவின் நிர்வாகம் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டுத்தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை காலம் கடத்தாமல் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பசு மாடு, கன்றுக்குட்டிகளுடன் சென்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அசோக்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story