பால் வேன் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்


பால் வேன் கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
x

சாலை மைய தடுப்பில் மோதி பால் வேன் கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை,

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜிதின் (வயது 32). இவர் அங்குள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் அவர் குளச்சல் பகுதியில் இருந்து பாலை எடுத்துக் கொண்டு வேனில் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தக்கலையை அடுத்த கல்லுவிளை பகுதியில் பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது சாலை மைய தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்தது.

இதில் வேன் டிரைவர் ஜிதினுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் வேனில் இருந்த பாலும் கொட்டி வீணானது.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் விரைந்து வந்து ஜிதினை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story
  • chat