மோட்டார் சைக்கிள் மோதி பால் வியாபாரி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி பால் வியாபாரி சாவு
திருப்பனந்தாள் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
பால் வியாபாரி சாவு
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பூச்சாத்தனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது63). பால் வியாபாரி. இவர் பால் வியாபாரத்திற்காக திருப்பனந்தாளில் இருந்து ஆடுதுறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இடையனூர் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிகேசவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மோதி பால் வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.