நூல் மில்லில் தீ விபத்து


நூல் மில்லில் தீ விபத்து
x

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர்

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நூல் மில்லில் தீ

முத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் வெள்ளகோவில் தீத்தம்பாளையம் தெற்கு தோட்டத்தில் கழிவு பஞ்சு அரைக்கும் நூல்மில் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் மில்லில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மதியம் திடீரென மில்லின் ஒரு பகுதியில் தீப்பிடித்துக்கொண்டது. மில்லில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இதை அறிந்ததும் விரைந்து வந்து அங்கு பற்றிய தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

பல லட்சம் சேதம்

இது பற்றி வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் மில்லில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story