ஊருக்குள் புகுந்த மிளா பிடிபட்டது


ஊருக்குள் புகுந்த மிளா பிடிபட்டது
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே ஊருக்குள் புகுந்த மிளா பிடிபட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜார் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க மிளா ஒன்று புகுந்தது. இதனை பார்க்க பொதுமக்கள் கூடியதால் மிளா ஆங்காங்கே ஓடியது.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வல்லநாடு வன அலுவலர் பிருந்தா, வனவர் அப்பாசாமி, ஜெயக்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் கந்தசாமி, காசிராஜா, சண்முகம், பேச்சி, ஓய்வு பெற்ற வனக்காப்பாளர் கருத்தையா உள்பட பலர் வந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மிளாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் நெல்லை வனக்கால்நடை மருத்துவ பிரிவு மருத்துவர் மனோகரன், பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், வனக்கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, செய்துங்கநல்லூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சரண்ராஜ் உள்பட வனத்துறையினர் ஈடுபட்டனர்.

சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 5 மயக்க ஊசிகள் செலுத்தி மிளாவை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக வல்லநாடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.


Related Tags :
Next Story