ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மினி கிளினிக் திறப்பு


ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மினி கிளினிக் திறப்பு
x

இட்டமொழி அருகே ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மினி கிளினிக்கை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி அருகே ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மினி கிளினிக்கை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

மினி கிளினிக்

இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தில் ஸ்ரீ கன்னி விநாயகர், அன்னை பராசக்தி கோவில் 12-ம் ஆண்டு வருசாபிஷேக விழா, ராமராஜா ரங்கநாயகி கோவில் 11-வது ஆண்டு வருசாபிஷேக விழா மற்றும் கன்னி விநாயகருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.

விழாவில் சபாநாயகர் மு.அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் வெங்கட்ராயபுரத்தில் ஓட்டல் சேலம் சரவணபவன் குரூப் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மினி கிளினிக்கை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

விழாவில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் சுடலை, தி.மு.க. மகளிரணி கல்யாணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

துணை சுகாதார மையம்

ஆவரைகுளம் பஞ்சாயத்து ஆவரைகுளம், பழவூர் பஞ்சாயத்து புதுக்காலனி, சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்து சிதம்பராபுரம் மற்றும் தனக்கர்குளம் பஞ்சாயத்து பெத்தரெங்கபுரம் ஆகிய ஊர்களில் பழுதடைந்துள்ள அரசு துணை சுகாதார மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை அந்தந்த பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 29 அரசு துணை சுகாதார மைய கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் 9 துணை சுகாதார மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தலா 30 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 துணை சுகாதார மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 360 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 18 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். தற்போது ஓரிரு கிராமங்களில் குடிதீர் நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரத்தை பெருக்கி மின் மோட்டார்கள் பழுதடைந்து இருந்தால் அவற்றை சீரமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்


Next Story