மினி லாரி மோதி வாலிபர் பலி
சின்னசேலம் அருகே மினி லாரி மோதி வாலிபர் பலியானாா்.
சின்னசேலம்:
ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டுரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சிவராஜ்(வயது 25). கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண் பார்த்திருந்தனர். இந்த பெண்ணை பார்ப்பதற்காக சிவராஜ், தனது உறவினர்களுடன் தோட்டப்பாடிக்கு சென்றார். அங்கு பெண் பார்த்து விட்டு சிவராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தோட்டப்பாடி மாரியம்மன் கோவில் அருகில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி, சிவராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர், சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.