மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து


மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

விழுப்புரம்

திண்டிவனம்

சென்னையில் இருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதை சரவணன் என்பவர் ஓட்டினார். திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது திடீரென டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான மினி லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story