மினி லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய காய்கறி, பழங்கள்
காரியாபட்டி அருேக மினி லாரி கவிழ்ந்த விபத்தில் சாலையில் காய்கறி, பழங்கள் சிதறின.
காரியாபட்டி,
காரியாபட்டி அருேக மினி லாரி கவிழ்ந்த விபத்தில் சாலையில் காய்கறி, பழங்கள் சிதறின.
மினி லாரி கவிழ்ந்தது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் திருக்கவேல். இவர் அப்பகுதியில் காய்கறி மற்றும் பழங்கள் மொத்த வியாபாரம் விற்பனை செய்து வருகிறார். இதற்காக நேற்று மதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி கொண்டு அவரது மினி லாரியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
சாலையில் சிதறிய காய்கறி
இதில் அதிர்ஷ்டவசமாக லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.
மினி லாரியை ஓட்டி வந்த விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முத்துமாரியப்பன் (வயது 40) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாலையில் சிதறி வீணாகியது. இதையடுத்து கவிழ்ந்த மினி லாரியை சரி செய்து காய்கறி மற்றும் பழங்களை ஏற்றி சென்றனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.