மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x

வன்னிக்னகோனேந்தல் ஊராட்சியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

வன்னிக்கோனேந்தல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் வள்ளிநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ராணி வரவேற்றார்.

மாணவ-மாணவியர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், திடக்கழிவுகள் மேலாண்மை குறித்தும், சுத்தமான கிராமமாக மாற்றுவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வன்னிக்கோனேந்தல் ஊரக பகுதியில் குப்பைகளை தரம் பிரித்தல் கூவாச்சி பட்டியில் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது. இதில் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார். முடிவில் வன்னிக்கோனேந்தல் ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் குட்டி ராஜா நன்றி கூறினார்.


Next Story