மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x

திருப்பத்தூரில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்து, அவரும் ஓடினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்து, அவரும் ஓடினார்.

மினி மாரத்தான் போட்டி

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூரில் மினி மராத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார், மினி மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலெக்டர், எம்.எல்.ஏ., டாக்டர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓடினர்.

சான்றிதழ்

பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக சென்று கிருஷ்ணகிரி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி கூட்ரோடு வழியாக சென்று தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடிவடைந்தது. மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, நல்லதம்பி எம்எல்ஏ கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினர்.

வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story