மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மினி மாரத்தான் போட்டி

நீலகிரி

ஊட்டி

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கியது. இதனை துணை இயக்குனர் பாலுசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மாரத்தான் போட்டியானது காந்தல், படகு இல்லம், மைசூரு பேலஸ் வரை நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் கட்டபெட்டு ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் சுரேஷ், பெண்கள் பிரிவில் ஓவேலி ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

1 More update

Next Story