மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:46 PM GMT)

மினி மாரத்தான் போட்டி

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் விஜய் திவாஸ் மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 'ராணுவ வீரருடன் ஓட்டம், ராணுவ வீரருக்காக ஓட்டம்' என்ற கருப்பொருளில் நடந்த மாரத்தான் போட்டி, இந்திய ராணுவத்துக்கும்-மக்களுக்கும்(குறிப்பாக இளைஞர்களுக்கும்) இடையே பிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டென்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். 5 கிலோ மீட்டர் மற்றும் 12½ கிலோ மீட்டர் தூரம் என இரு பிரிவுகளில் மாரத்தான் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story