மினி மாரத்தான் போட்டி
சிங்கம்புணரி அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மயில்ராயன்கோட்டை நாடு மாம்பட்டி கிராமத்தில் பிரியா விடை நயனார் பொன்னாவிடை செல்வி 10-ம் திருநாள் தீர்த்தவாரி மண்டகப்படி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் மாம்பட்டியில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோமீட்டர் சென்று வர எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியை எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை, கோப்பை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story