மணலூர்பேட்டையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி: டி.எஸ்.பி. மனோஜ்குமார் தொடங்கி வைத்தார்


மணலூர்பேட்டையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி: டி.எஸ்.பி. மனோஜ்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 8:10 AM GMT)

மணலூர்பேட்டையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை டி.எஸ்.பி. மனோஜ்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

போதைப் பொருள் தடுப்பு ஒழிப்பு தினத்தையொட்டி மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி மணலூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மனோஜ்குமார் தலைமை தாங்கி, மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர். முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு டி.எஸ்.பி. பரிசு வழங்கி பாராட்டினார். சிறப்பு அழைப்பாளராக நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.ஜெய்கணேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் நிறைவு நிகழ்ச்சியின்போது போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மணலூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையில் மணலூர்பேட்டை தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏட்டு கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெண் காவலர் மைதிலி நன்றி கூறினார்.


Next Story