பிளாஸ்டிக், போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி
நெமிலியில் பிளாஸ்டிக், போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நெமிலியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்டனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த போட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இதில் முதல் மற்றும் இரண்டாவது இடம்பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள் மற்றும் மராத்தானில் கலந்து கொண்ட பெண்கள் பிரிவில் முதல் வெற்றியாளருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ச.தீனதயாளன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவர் சந்திரசேகர், வேதையா, சேகர், பாபு, அப்துல் நசீர், மருத்துவத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.