பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்


பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்
x

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவிகளுக்கான மினி மாரத்தான் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கொடியசைத்து மினி மாரத்தானை தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாந்தோணி அரசு கலைக்கல்லூரி வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மினி மாரத்தானில் தோகைமலை செர்வைட் கல்லூரி முதலாம் ஆண்டு (தமிழ்) மாணவி வாசுகி முதல் இடத்தையும், அரசு மகளிர் கலைக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி (பி.காம்) சந்தியா 2-ம் இடத்தையும், புன்னம்சத்திரம் அன்னை மகளிர் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி (தமிழ்) சரண்யா 3-ம் இடத்தையும் பிடித்தனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளும், அடுத்த 6 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. அப்போது கலெக்டர் கூறுகையில், பெண் கல்வியை பாதுகாத்து குழந்தை திருமணத்தை முற்றிலும் அகற்றி உயர்கல்வி வரை தொடர்ந்து பெண்கள் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story