2-ம் நிலை காவலர்களுக்கு மினி மாரத்தான்


2-ம் நிலை காவலர்களுக்கு மினி மாரத்தான்
x

வேலூரில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான மினிமாரத்தான் போட்டியை போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.

வேலூர்

2-ம் நிலை காவலர்கள்

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேர் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கவாத்து, யோகா, முதலுதவி அளித்தல், நன்னடத்தை, கலவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம், துப்பாக்கி மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காவலர் பயிற்சி பள்ளி சார்பில் மினிமாரத்தான் போட்டி வேலூர் காந்திசிலை அருகே நேற்று நடந்தது. பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிஷ்ணன் முன்னிலை வகித்தார்.

மினிமாரத்தான் போட்டி

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். காந்தி சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் மக்கான் சிக்னல், மீன்மார்க்கெட், கோட்டை சுற்றுச்சாலை, அண்ணா கலையரங்கம், கோட்டை மைதானத்தில் ஒரு சுற்றுடன் நிறைவடைந்தது. இதில் 2-ம் நிலை பெண் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சுமார் 5 கிலோ மீட்டர் ஓடினார்கள்.

இதில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பயிற்சி பள்ளி இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, கனிமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story