சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி


சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி
x

சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியின் சார்பில் 60-வது விளையாட்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மினிமாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் பங்குபெற்ற போட்டி 12.5 கிலோமீட்டர் தூரமாகவும், மாணவிகள் கலந்து கொண்ட போட்டி 5 கிலோ மீட்டர் தூரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியின் முதல்வர் அசோக் போட்டிகளை தனித்தனியாக தொடங்கி வைத்தார். மாணவர்கள் பிரிவில் 1,410 பேரும், மாணவிகள் பிரிவில் 1,370 பேரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை சதீஷ், ஆர்.ஸ்ரீராம், டி.ஸ்ரீராம் ஆகியோர் பெற்றனர். மாணவிகள் பிரிவில் அனுசியா, கலையரசி, மகாலட்சுமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வெற்றி கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.



Next Story