போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான்

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான்
x

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று திருவண்ணாமலையில் மினி மாரத்தான் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று திருவண்ணாமலையில் மினி மாரத்தான் நடத்தப்பட்டது.

போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியானது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் தொடங்கி 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபய மண்டபம் வரை சென்று முடிவடைந்தது.

போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கி வெகுவாக பாராட்டினார். பின்னர் அவரது தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாணவ, மாணவிகள் கையொப்பமிட்டனர்.

நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

==========

Next Story