தீ தொண்டு நாளையொட்டி மினி மாரத்தான்


தீ தொண்டு நாளையொட்டி மினி மாரத்தான்
x

தீ தொண்டு நாளையொட்டி மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் மினி மாரத்தான் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி பஸ் நிலையம், திலகர் திடல், பழனியப்பா கார்னர் வழியாக புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையம் வந்தடைந்தது. இதில் 70 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு இளைஞர்கள் சார்பில் 30 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்களுக்கு நிலையத்தில் தீ பாதுகாப்பு தொடர்பான போலி ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. மாரத்தானை உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை நிலைய தீயணைப்பு அலுவலர் புருஷோத்தமன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story