ரூ.389½ கோடி திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு


ரூ.389½ கோடி திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு
x
திருப்பூர்


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.389½ கோடியில் நடக்கும் திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

அமைச்சர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வு குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி பாண்டியன்நகரில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 15 லட்சம் லிட்டர், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சினேகா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேர்த்தேக்க தொட்டி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.31 கோடியில் புனரமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையம், ரூ.54 கோடியே 36 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கம், சிக்கண்ணா அரசு கல்லூரியில் ரூ.9 கோடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கம் ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

ரூ.389½ கோடி திட்டப்பணிகள்

மேலும் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு எஸ்.ஆர்.சி. மில் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45 கோடியே 25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகள் என மொத்தம் ரூ.389 கோடியே 61 லட்சம் மதிப்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர்கள் கண்ணன், வாசு, மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கவுன்சிலர் பி.ஆர். செந்தில்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story