181 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாமில் 181 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
உகாயனூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 181 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
181 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், உகாயனூர் ஊராட்சி நல்லகாளிபாளையம் சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 181 பேருக்கு ரூ.79 லட்சத்து 91 ஆயிரத்து 768 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் 27 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு இணையவழி பட்டா, 4 பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை, 9 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, 11 பேருக்கு முதல்-அமைச்சர் சாலை விபத்து நிவாரண உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டி, 8 பேருக்கு தையல் எந்திரம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரம், தாட்கோ சார்பில் தொழில் முனைவோருக்கு கடனுதவி, மகளிர் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு கடனுதவி, கூட்டுறவுத்துறையின் சார்பில் 6 பேருக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார கடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் 5 பேருக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவ பெட்டகம் உள்பட மொத்தம் 181 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதிய ரேஷன் கடை திறப்பு
பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றார். முன்னதாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் உகாயனூர் ஊராட்சி பொல்லிகாளிபாளையத்தில் ரூ.11 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, மாவட்ட வழங்கல் அதிகாரி மகாராஜ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வியாஸ் அகமது பாஷா, தாட்கோ மேலாளர் ராமலிங்கம், மாவட்ட சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, தெற்கு தாசில்தார் புனிதவதி, உகாயனூர் ஊராட்சி தலைவர் ரேவதி கனகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.