தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்குஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தைநிறைவேற்ற நடவடிக்கைஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
முதல்வன் விருது
தர்மபுரி மாவட்ட அன்னை கஸ்தூரிபாய் சேவா சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு காமராஜரின் முதல்வன் விருது வழங்கும் விழா தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை தாங்கினார்.
தனியார் பள்ளி கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், அன்னை கஸ்தூரிபா சேவா சங்க தலைவர் சக்திவேல், ஸ்ரீராம் பள்ளி நிறுவனர் வேடியப்பன், ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்டான்லி முருகேசன், ஸ்ரீ பி.சி.ஆர். பள்ளி தாளாளர் பி.சி.ஆர். மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் கலைமகள் நடராஜன் வரவேற்று பேசினார்.
ஒகேனக்கல் காவிரி உபரிநீர்
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காமராஜரின் முதல்வன் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன், சங்க பொருளாளர் ரமேஷ், சங்கத் துணைத் தலைவர் கருணன் சொக்கலிங்கம் மற்றும் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கிருபாகரன் நன்றி கூறினார்.