காரிமங்கலத்துக்குஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வருகை60 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுகிறார்


காரிமங்கலத்துக்குஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வருகை60 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 24 Sep 2023 7:00 PM GMT (Updated: 24 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை வருகிறார். 60 அடி உயர கம்பத்தில் அவர் கட்சி கொடி ஏற்றுகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வருகிறார். அவருக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் 60 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றுகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு காரிமங்கலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு செட்டிக்கரையில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 12.30 மணிக்கு தர்மபுரி நகருக்கு வருகை தரும் அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் புரோக்கர் ஆபீஸ் அருகில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை பெற்றுக் கொள்ளும் அவர் அங்கு 60 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

சிறுதானிய திருவிழா

தொடர்ந்து அவர் மதியம் 1 மணி அளவில் இலக்கியம்பட்டியில் கலைஞர் நூலகம் திறப்பு விழாவிலும், மதியம் 1.30 மணி அளவில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். மாலை 3.30 மணிக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெறும் சிறுதானிய திருவிழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

மாலை 5.30 மணிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் மாவட்ட அளவிலான சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் இரவு 7 மணிக்கு தர்மபுரி ஜோதி மகாலில் நடைபெறும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி அவர் செல்லும் சாலைகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பி.பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி மற்றும் அரசு துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


Next Story