நல்லூர்-காவிலிபாளையம் குட்டைகளை நிரப்ப நடவடிக்கை; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

நல்லூர்-காவிலிபாளையம் குட்டைகளை நிரப்ப நடவடிக்கை; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x

நல்லூர்-காவிலிபாளையம் குட்டைகளை நிரப்ப நடவடிக்கை; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு

ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து நேற்று காலை கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமி தண்ணீரை திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு எதுவும் இல்லை. தேவையான அளவு உரம் உள்ளது. தூயமல்லி என்ற நெல் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். பவானிசாகர் அணை நிரம்பி உபரி தண்ணீர் திறக்கும் சமயத்தில் கீழ்பவானி வாய்க்காலின் ஓரத்தில் உள்ள நல்லூர் மற்றும் காவலிபாளையம் பகுதிகளில் உள்ள குட்டைகளை நிரப்ப திட்டம் தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த சாலையில் செல்ல உரிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story