ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு

ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி

நகர்ப்புற உள்ளாட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடுகள் குறித்து அறிக்கை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.1,000 கோடி நிதி

மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடங்கும்.

நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் பல்வேறு குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குப்பை வரி

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு 2014-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. எனினும் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், நகர்புற வளர்ச்சி முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா, கலெக்டர் கிருஷ்ணனுன்னி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர் சி.கே.சரஸ்வதி உள்பட பலர் இருந்தனர்.


Next Story