ஈரோட்டில் ரூ.80¼ கோடி செலவில் துணை மின் நிலையம்- காணொலி காட்சி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஈரோட்டில் ரூ.80¼ கோடி செலவில் துணை மின் நிலையம்- காணொலி காட்சி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 14 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து வீட்டு வசதித்துறை அமைச்சர், ஈரோடு தலைமை மின் வளாகத்தில் ரூ.80 கோடியே 26 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள துணை மின் நிலையத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கஸ்தூரி, மின்சார வாரிய தலைமை பொறியாளர் (பொறுப்பு) இந்திராணி, ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர் சிவபிரகாஷ், செயற்பொறியாளர்கள் அருள் அரசு, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.