மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்


மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் பள்ளியில்  ரூ.5 லட்சத்தில் திருவள்ளுவர் சிலை  அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரே கல்லில் ஆன சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. மல்லசமுத்திரம் பேரூராட்சி தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்ததுடன், மரக்கன்றுகளை நட்டு பிளாஸ்டிக்கு மாற்றாக பொதுமக்களுக்கு மஞ்சப்பைகள வழங்கி பேசினார்.

விழாவில் திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட துணைச்செயலாளர் மயில்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் தயாநிதி, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் மதன் கார்த்திக், அமெரிக்கா வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இயக்குனர் குழந்தைவேல் ராமசாமி மற்றும் பள்ளி வேளாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை செல்வ லட்சுமி நன்றி கூறினார்.


Next Story