சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் 96 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் 96 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
சோலார்
சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 96 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். பின்னர் குடியிருப்புகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் குடியிருப்புகளுக்குள் இருக்கும் வசதிகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி பேரூர் தி.மு.க. செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகர், சின்னியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் செல்வகுமார், உதவி பொறியாளர் பிரசன்னா, உதவி நிர்வாக பொறியாளர் சரவணகுமார், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன், சின்னியம்பாளையம் ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ராமசாமி, துணைத்தலைவர் ஆனந்தி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.