எந்த ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு என்று கூறினால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கே மருந்து அனுப்பி வைக்க தயார்- ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

எந்த ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு என்று கூறினால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கே மருந்து அனுப்பி வைக்க தயார்- ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

எந்த ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு என்று கூறினால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கே மருந்து அனுப்பி வைக்க தயார் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஈரோடு

எந்த ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு என்று கூறினால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கே மருந்து அனுப்பி வைக்க தயார் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மக்களை தேடி மருத்துவம்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம், மருத்துவ கல்லூரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருவது, அவருக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என தோன்றுகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலமாக 1 கோடியே ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். இது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே முன்னோடி திட்டமாகும்.

மருந்து

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகத்தில் துணை வேந்தர் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னால், அவருக்கும், கவர்னருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று அர்த்தம். அவர் கவர்னரிடம் சென்று கேட்க வேண்டியதுதானே. கவர்னர் தான் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்.

அதுபோல, அத்தியாவசிய மருந்துகள் இல்லை என்று பொதுவாக கூறிஉள்ளார். எந்த ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு உள்ளது என்று கூறினால் உடனடியாக அனுப்ப தயாராக இருக்கிறோம். மருந்து இல்லை என்றால் 104 என்ற எண் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். இதுவரை எங்கும் புகார் வரவில்லை. எந்த ஆஸ்பத்திாியில் எந்த மருந்து இல்லை என்று ஆதாரப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் கூறினால் உடனடியாக அவரது வீட்டுக்கே மருந்தை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Next Story