தேன்கனிக்கோட்ைட, சூளகிரி தாலுகாக்களில்ரூ.13¾ கோடியில் ஏரிகள் புனரமைப்பு பணிஅமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்


தேன்கனிக்கோட்ைட, சூளகிரி தாலுகாக்களில்ரூ.13¾ கோடியில் ஏரிகள் புனரமைப்பு பணிஅமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாக்களில் உள்ள ஏரிகளில் ரூ.13 கோடியே 75 லட்சம் மதிப்பில் சீரமைப்பு மற்றும் புனரமைத்தல் பணிக்கான பூமிபூஜை பேலகொண்டப்பள்ளியில் நடந்தது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி தடிக்கல் ஏரி, மல்லிகார்ஜூன துர்க்கம் ஏரி, அடவங்கா ஏரி, பெத்த செருவு ஏரி, ஜவளநாயக்கன் ஏரி, நாகேந்திரன் ஏரி, லட்சுமி கவுண்டன் ஏரி, பண்ணப்பள்ளி ஏரிகள் சீரமைகப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், பார்த்திபன், பொன்னிவளவன், ராதிகா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மம்தா, ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், நாகரத்தினம், தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story