தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்
முன்னாள்-முதல் அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி அணிவித்தார்.
முன்னாள்-முதல் அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி அணிவித்தார்.
கருணாநிதி பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த ஆண் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி அறிவித்து இருந்தார். அதன்படி அன்றைய தினம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அமைச்சர் கயல்விழி தங்க மோதிரத்தை அணிவித்தார். மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பழ வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட் வழங்கினார்.
அதே நாளில் தளவாய் பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கும் தங்க மோதிரம் அணிவித்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் மற்றும் ரியல் அறக்கட்டளை, தீபம் அறக்கட்டளையில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் போர்வை, பெட்ஷிட் ஆகியவற்றை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஊராட்சி ஒன்றிய குழு எஸ்.வி. செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், நகரச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், தாராபுரம் நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமுதா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ஹைடெக் அன்பழகன், ஆனந்தி, நகராட்சி கவுன்சிலர்கள் ராசாத்தி பாண்டியன், முரட்டாண்டி உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.