ரூ.34½ கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம்


ரூ.34½ கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம்
x

தாராபுரத்தில் ரூ.34.65 ேகாடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னையில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்

தாராபுரத்தில் ரூ.34.65 ேகாடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னையில் இருந்தபடி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று காணொலி காட்சி வாயிலாக தாராபுரம் உள்ளிட்ட 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்துவைத்தார்.

இதைெயாட்டி நேற்று தாராபுரம் தொழிற் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்

தொழிற்பயிற்சி நிலையம்

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தொழில் துறையில் மிக பின்தங்கிய மாவட்ட மக்களின் நலன் கருதி 1962-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்டது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில்9 பாரம்பரிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் மொத்தமாக 500 மாணவ-மாணவிகள் பொருத்துநர், கடைசலர், பற்ற வைப்பவர், எந்திர வேலையாள், கம்மியர் எந்திர கலப்பை, அச்சு வார்ப்பவர், கருவி மற்றும் அச்சு செய்பவர், ஆபரேட்டர், அட்வான்ஸ்ட் மெஷின் டூல்ஸ், கம்பியாள் போன்ற பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

ரூ.34.65 கோடி மதிப்பில்

தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 என்ற நவீன தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டாடா குழுமத்துடன் தமிழக அரசு தொழில் 4.0 என்ற தொழில் பயிற்சியின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அறிவினை அடித்தட்டு சமுதாயத்திலிருந்து வரும் பயிற்சியாளர்களும் பயிற்சி பெற வேண்டும் என்ற உன்னத தொலை நோக்கோடு தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசானது. ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டத்தினை தமிழ்நாடு முதல-அமைச்சர் நேற்று தொடங்கிவைத்தார்.

அந்த வகையில் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் பயிற்சியாளர்கள் பயனடையும் வகையில், ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் "தொழில் 4.0 டெக்னாலஜி சென்டர்" என்ற நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன கணினி மயமாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் அட்வான்ஸ் மிஷினிங் டெக்னீசியன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேனுபாட்சரிங் டெக்னீசியன். பேசிக் டிசைனர் -விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்). மேனுபேச்சரிங் பிராசசஸ் கண்ட்ரோலர் - ஆட்டோமேஷன் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதன் மூலம் இப்பகுதியிலுள்ள ஏழை. மாணவர்கள்- மாணவியர்கள் அதிநவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதை உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது வாழ்வின் தரம் உயர்ந்து சமுதாயத்திற்கு பெரும் பயனாக இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் திருப்பூர், தாராபுரம், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990 55696 என்ற எண்ணிலும், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990 55698 என்ற எண்ணிலும், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990 55700 என்ற எண்ணிலும் உதவி இயக்குனரை 94990 55695 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மரக்கன்று நடுதல்

இதனை தொடர்ந்து தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அம்மாபட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், மண்டல இணை இயக்குனர் முஸ்தபா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகராட்சி தலைவர்கு.பாப்புகண்ணன், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், நகராட்சி ஆணையர் ராமர், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் மற்றும்நகராட்சி கவுன்சிலர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story