அரசு பள்ளிக்கூடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


அரசு பள்ளிக்கூடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
x

கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடத்தையும், சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சரிடம், பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், சுகாதார வளாக வசதி கேட்டு தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் கோரிக்கை மனு கொடுத்தார்.

2,200 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளிக்கூடத்திற்கு பள்ளியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நான்கு பகுதிகளில் நுழைவாயில்களை ஏற்படுத்த வேண்டும் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஆய்வின் போது தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான், கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் சுரேஷ், அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story