யூ-டியூப் மூலம் பிரபலமான சிறுவன் ரித்விக் - விருது வழங்கி கவுரவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறுவன் ரித்விக்கை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
கோவை,
யூ-டியூப் சேனல் மூலம் பல்வேறு தோற்றங்களில் நடித்து பிரபலமானவர் சிறுவன் ரித்விக். சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட இவரது யூ-டியூப் சேனலில், பலவித வேடங்களில் இவர் நடித்து அசத்தும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனை தொடர்ந்து சினிமாவில் நயந்தாராவுடன் 'ஓ-2', கார்த்தியுடன் 'சர்தார்' ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரித்விக் நடித்துள்ளார். இந்த நிலையில், கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறுவன் ரித்விக்கை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது குழந்தை நட்சத்திரமான ரித்விக்கை பாராட்டிய அமைச்சர், அவருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
Related Tags :
Next Story