கல்லணை கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் பெருகி ஓடும் தண்ணீர், கல்லணை நிலவரம் குறித்து தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீரை காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் மதகுகள் கொண்ட அணை கல்லணை. மழை காரணமாக ,மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அதிகரித்து கல்லணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும்.
இதற்காக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் 35 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணை கொள்ளிடம் ஆற்றில் பெருகி ஓடும் தண்ணீர், கல்லணை நிலவரம் குறித்து தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் பொது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை தகுதி எம்எல்ஏ டி. கே. ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், பூதலூர் தாசில்தார் பிரேமா, கல்லணை உதவி பொறியாளர் திருமாறன்,ஆகியோர் உடனிருந்தனர்.
கல்லணையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுக்காம்பார்கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை பார்வையிட்டார். கொள்ளிடக்கரையில் காரில் சென்று பூண்டி செங்கரையூர் பாலம், வானராங்குடி கிராமத்தில் கொள்ளிடக்கரையை பார்வையிட்டார்.






