கல்வராயன்மலையில் உள்ளபள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தாா்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன் மலையில் உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களை சந்தித்து பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வந்து பாடங்கள் சொல்லி தருகிறார்களா, வழங்கப்படும் உணவு நன்றாக உள்ளதா என்று கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்களின் கோரிக்கைள் என்ன என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். மேலும் பாடப்புத்தகங்கள் மூலம் மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி கேள்விகளையும் கேட்டார்.
இதேபோன்று, சேராப்பட்டு அருகே உள்ள கிளாக்காடு, தரசுகாடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சேராப்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, இன்னாடு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.