அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்


அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்
x

அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு

திருப்பூர்

திருப்பூர்

அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து முழு கவனம் செலுத்தி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது. அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணியை சிறப்பாக மேற்கொண்டு திருப்பூர் மாவட்ட முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும்.

நலத்திட்டங்கள்

திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களிடம் சென்றடைய அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.



Next Story